திக்கிலான்விளையில் முன்று சாலைகள் சந்திப்பு பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சந்திப்பின் சாலையோரத்தில் ராட்சத அரசமரம் பெரிய கிளைகளுடன் உள்ளது. காற்றின் வேகத்தில் பரந்து விரிந்து காணப்படும் இந்த மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி ஆபத்தான நிலையில் காணப்படும் மரத்தின் கிளைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.