பராமரிக்கப்படாத குடியிருப்புகள்

Update: 2022-07-25 13:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வம்பன் 4 ரோட்டில் திருவரங்குளம் வட்டார வேளாண்மை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் 5-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பாழடைந்து பயன்பாடு இன்றி காணப்படுகிறது. குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காத நிலையில் இந்த வீடுகளை சரி செய்தால், பணிபுரியும் அலுவலர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும். ஏற்கனவே வம்பன் வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்தனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி