ராமநாதபுரம் மாவட்டம் புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு இலவச கழிப்பிட வசதி இல்லை. இதனால் பயணிகள் சிலர் அங்குள்ள மறைவான இடத்தில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இதனால் பஸ் நிலையம் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகின்றது. எனவே பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.