தாழக்குடியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து சொல்வோரை விரட்டுவதும், கடிக்க முயற்சித்தும் வருகின்றன. இதனால், பெண்கள், குழந்தைகள் பெரும் அச்சத்துடனேயே தெருக்களில் நடந்து செல்கின்றனர். எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.