தோவாளை தாலுகாவிற்க்கு உட்பட்ட திட்டுவிளை அனந்தனார் கால்வாயின் அருகே அம்மணம் குளம் உள்ளது. பூதப்பாண்டி பேரூராட்சியில் குடிநீர் தேவைக்கான குடிநீர் கிணறு குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வரும் இந்த குளத்தின் கரையில் சமீபகாலமாக சிலர் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தின் கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேக் அப்துல்காதர், திட்டுவிளை.