குப்பை தொட்டியாக மாறிய குடிநீர் கிணறு

Update: 2022-07-23 18:32 GMT

சங்கராபுரம் தாலுகா ரிஷிவந்தியம் ஒன்றியம் சீர்ப்பனந்தல் ஊராட்சியில் குடிநீர் கிணறு பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இந்த கிணற்றில் சிலர் குப்பைகளை போட்டு செல்வதால் தற்போது குப்பை தொட்டியாக மாறி உள்ளது. மேலும் கிணறு திறந்த நிலையில் இருப்பதால் குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்