கோவில்பட்டி புது கிராமம் நகராட்சி கழிப்பிடம் முன்பகுதியில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுகிறார்கள். மேலும் குப்பை வண்டிகளையும் அதன் அருகில் நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. இதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?