ஈக்கள் தொல்லை

Update: 2023-06-07 15:26 GMT
பழனி அருகே வத்த கவுண்டன் வலசு என்னுமிடத்தில் தனியார் கோழி பண்ணை இயங்கி வருகிறது. கோழி கழிவுகளை முறையாக அகற்றாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, ஈக்கள் மற்றும் கொசு தொல்லையால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், 15 வருடங்களாக இது குறித்து திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் காவல்துறையினரிடமும் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் இல்லை. தகுந்த அதிகாரிகள் இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



மேலும் செய்திகள்