நெல்லை மாநகராட்சி வார்டு எண் 37 குமரன் நகரில் 20 அடி ஆழத்திற்கு பாதாள சாக்கடை நீரேற்று நிலையம் அமைப்பதற்காக குழி தோண்டி உள்ளனர். தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்படாததால் இந்த குழியில் கால்நடைகள் தவறி விழுந்து இறக்கின்றன. தவறுதலாக தோண்டப்பட்ட இந்த குழியைச்சுற்றி வேலியும் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.