முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துமாலை அம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள ரோட்டின் நடுவில் குழி தோண்டி குடிநீர் செல்லும் பைப் லைன் வேலை சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று முடிவுற்றநிலையில், இன்று வரை அந்தபகுதியில் தார் ரோடு போடாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். விரைவில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த ரோட்டில் பயணிப்பது கடினமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரோட்டை உடனடியாக சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.