நெல்லை புதிய பஸ் நிலைய நடைமேடைகளில் கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்பால் பயணிகள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. இதனால் காலை, மாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் பரிதவிக்கின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே நடைமேடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.