கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள புகழூர் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இடித்துவிட்டனர். இதுவரை அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டித்தரவில்லை. இந்நிலையில் முத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் இடிக்கப்பட்ட பாலத்தின் வழியாக காவிரி ஆற்றுக்கு சென்று அங்கு குளித்தும், துணிகளை துவைத்தும், கால்நடைகளை ஓட்டிச் சென்று மேச்சளுக்கு விட்டும், விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு இடுப்பொருட்களை எடுத்துச் சென்றும், விலை பொருட்களை கொண்டு வந்தனர். இந்நிலையில் பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டாததால் தொடர்ந்து இவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.