செட்டியக்காபாளையத்தில் இருந்து நெகமம் செல்லும் வழியில் எம்மேகவுண்டன்பாளையம் உள்ளது. இங்கு ஊரின் பெயரை தெரிந்து கொள்ள நெடுஞ்சாலை துறை சார்பில் பெயர் பலகை வைத்தனர். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கேபிள் ஒயர் பதிக்க பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அப்போது பெயர் பலகை அகற்றப்பட்டது. குழியை மூடிய பிறகும் பெயர் பலகையை வைக்கவில்லை. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மீண்டும் பெயர் பலகையை வைக்க வேண்டும்.