சேரன்மாதேவி தாலுகா புதுக்குடி செல்லபிள்ளையார் கோவில் தெற்கு தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக சிமெண்டு சாலையில் பள்ளம் தோண்டினர். தொடர்ந்து குடிநீர் குழாய் பதித்த பின்னர் சாலையை சீரமைக்கவில்லை. மேலும் அங்கு வாறுகாலும் அமைக்காததால் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.