விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி அருகே சூடிபுதூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்த பள்ளி பராமரிப்பற்று சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இங்கு படிக்க அச்சப்படுகிறார்கள். இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூைரயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.