வாகனங்களுக்கு இடையூறாக கருவேல மரங்கள்

Update: 2022-07-19 11:30 GMT
வாகனங்களுக்கு இடையூறாக கருவேல மரங்கள்
  • whatsapp icon

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே தொண்டி வழியாக உப்பூர் வரை  கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்நிலையில் இந்த சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து முட்புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் கருவேல மரங்களால் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

ராஜராம், ஓடவயல்

மேலும் செய்திகள்

பஸ் வசதி