தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் அத்தியூர் ஊராட்சி கு௫கூர் கிராமத்தில் மயான வசதி இல்லை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கொள்ளிடம் ஆற்றின் கரையில் அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்லும் நேரங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மயான வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.