ஈரோடு சாஸ்திரிநகர் நால்ரோடு அருகில் பொதுமக்களின் வசதிக்காக பொது கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பறை பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. அங்கு வாரந்தோறும் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் காய்கறிகள் சந்தை நடக்கிறது. அப்போது வியாபாரிகளும், காய்கறிகள் வாங்க வருபவர்களும் கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பொது கழிப்பறையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.