தூர்வார வேண்டும்

Update: 2022-12-14 07:45 GMT

கடியப்பட்டணத்தில் அந்தோணியார் தெருவில் ஆலயத்தின் அருகில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக தூர்வாராததால் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. ேமலும், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், குளத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருள், கடியப்பட்டணம்.

மேலும் செய்திகள்