முறையாக அமைக்கப்படாத பாலம்

Update: 2022-07-17 16:20 GMT

பவானியை அடுத்த மயிலம்பாடியில் இருந்து சேவண்டியூர் செல்லும் ரோட்டில் மேட்டூர் வலது கரை வாய்க்காலின் கிளை ஒன்று செல்கிறது. இந்த கிளை வாய்க்காலில் பாலம் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் அமைக்கப்பட்டு உள்ள பாலம் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் திரும்பும்போது விபத்தில் சிக்கி கொள்கின்றன. எனவே பாலத்தை முறையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்