நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பஸ்நிலையம் அருகே சுற்றுச்சுவருடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த சுற்றுச்சுவரில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சுற்றுசுவர் அதன் உறுதி தன்மையை இழக்கும் நிலையில் உள்ளது. இதன்காரணமாக அந்த சுற்றுச்சுவர் அருகே செல்லவே பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.