விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்துள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்துள்ளதால் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே இந்த கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.