நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடையின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற்ற வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடை பயன்பாடின்றி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரேஷன்கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.