சாலையில் தேங்கிய மழைநீர்

Update: 2022-11-02 11:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழக்கிடாரம் கிராமத்தில் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக கீழக்கிடாரம் முதல் மேலக்கிடாரம் வரை உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி வாகனஓட்டிகள் சென்று வர சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது. எனவே சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்