நாய்கள் தொல்லை

Update: 2022-10-06 16:07 GMT

கருங்கல் பகுதியில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கருங்கல் பஸ்சில் நிலையத்துக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது, பஸ்நிலையத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை பஸ் இருந்து இறங்கும் பயணிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சித்து வருகிறது. இதனால், பயணிகள் அச்சத்துடனேயே நிலையத்துக்குள் வந்து செல்கின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில்குமார், கருங்கல்.

மேலும் செய்திகள்