திருவாரூர் மாவட்டம் அவளிவநல்லூர் ஊராட்சியில் பிள்ளையார் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு படித்துறை இல்லை. இதனால் கோவிலுக்கு வருபவர்கள் புனித நீராடவும், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தண்ணீர் தேவைக்கு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து படித்துறை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.