மாணவ-மாணவிகள் அவதி

Update: 2022-09-28 13:28 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி வேலிவியூ பகுதியில் இருந்து கிராண்டப் வழியாக கேத்திக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் தவறி விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்