கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு கன்னக்குறிச்சியில் கருனா குளம் உள்ளது. இந்த குளத்தின் மறுகால் பாயும் மதகு மற்றும் தடுப்பணை, படித்துறை உடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் தேங்குவது இல்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் மதகு, தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.