புஞ்சைபுளியம்பட்டி 11-வது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் 5-க்கும் மேற்பட்டோர் காய்ச்சாலால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் 11-வது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.