கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பேரூராட்ச்சிக்கு உள்பட்ட பொன்னாச்சி புதூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இ்ங்குள்ளவர்கள் பொது கழிப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் இங்குள்ளவர்கள் திறந்த வெளிப்பகுதியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே இங்குள்ளவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க கழிப்றை கட்டிக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.