ஆஸ்பத்திரிக்கு வருவோர் அவதி

Update: 2022-09-25 13:12 GMT

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் மூலம் அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இந்த சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர் வசதி இல்லை. இதனால் சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்