பொதுமக்களுக்கு இடையூறான கால்நடைகள்

Update: 2022-09-24 12:48 GMT

நாகை மாவட்டம் நாகூர் கடற்கரைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த கடற்கரையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கடந்த சில நாட்களாக நாகூர் கடற்கரையில் ஏராளமாக கால்நடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் மாடுகள் பொதுமக்களை விரட்டுவதால் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடற்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்