கோவை மாநகராட்சி 54-வது வார்டு நீலிக்கோணாம்பாளையத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை சுற்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுகழிப்பிடத்தை பயன்படுத்தும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே புதர்செடிகளை அகற்றிட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.