நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி தெற்கு தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு அருகில் உள்ள மரத்தில் கதண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் அந்த பகுதியின் வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு கதண்டுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.