பயன்பாட்டுக்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2022-09-16 16:34 GMT

தர்மபுரி மாவட்டம் லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொதுமக்கள் தேவைக்காக குறைவான விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக பல லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் (ஆர்.ஓ.) அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இதனை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு பூட்டி வைத்துள்ளனர். இதனால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் துருப்பிடித்து வீணாகி வருகிறது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அரவிந்த், தர்மபுரி.

மேலும் செய்திகள்