கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பத்தால் ஆபத்து

Update: 2022-09-12 13:43 GMT

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் கலெக்டர் அலுவலகத்தின் எதிர்ப்புறம் உள்ள இரும்பு கம்பத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கவும் இந்த கேமரா காவல்துறையினருக்கு பயன்பட்டு வருகிறது. ஆனால் கேமரா பொருத்தப்பட்டுள்ள இந்த கம்பம் எந்நேரமும் சாய்ந்து விழுக்கூடிய அபாயத்தில் உள்ளது. அந்த கம்பத்தின் ஒரு பகுதியை கயிறு மூலம் இழுத்து அருகே உள்ள போக்குவரத்து மண்டல அலுவலக காம்பவுண்டு சுவர் கம்பியில் கட்டி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சாலையில் தலைக்கு மேல் உள்ள ஆபத்தை உணர்ந்து அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பத்தை சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி