விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்களபுரம் செல்லும் சாலையில் அய்யம்பட்டி பிள்ளையார்கோவில் தெரு அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்த பின்னர் குழியை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் இவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடிவதில்லை. மேலும் குழந்தைகளும் குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளதால் கால்வாயை குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.