ஆபத்தான நிலையில் தொங்கும் மரக்கிளை

Update: 2022-07-11 14:16 GMT

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் முதலியார்பட்டி காந்திநகர் பகுதி 3-வது தெரு நுழைவுவாயில் அருகில் சாலையோரத்தில் மருதமரம் உள்ளது. அந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக முறிந்து சாலையின் நடுவே அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியாக சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் முறிந்த கிளை விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கும் மரக்கிளையை உடனே வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுககொள்கிறேன்.

மேலும் செய்திகள்