உடைந்த சுவர்
கோபியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். அவ்வாறு வந்து செல்லும் மருத்துவமனையின் பின்புற சுவர் உடைந்து காணப்படுகிறது. அந்த சுவர் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.