ஆதார் சேவை வசதி

Update: 2022-08-30 15:11 GMT
ஆதார் அட்டையில் பொதுமக்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்பேசி எண் உள்ளிட்டவைகளை தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் திருத்திக் கொள்ளலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் வடமதுரை தபால் நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக திருத்தங்கள் செய்யும் வசதி நடைமுறையில் இல்லை. செல்போன் எண் மாற்றம் மட்டுமே செய்து வந்தனர். அதுவும் கடந்த ஒரு வாரமாக செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். எனவே வடமதுரை தபால் நிலையத்தில் ஆதார் பிழை திருத்தும் சேவையை முறையாக தொடர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்