மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை ஒட்டி கடந்த 2013-ம் ஆண்டு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஈமகிரியை மண்டபம் கட்டப்பட்டது. ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் இறந்தவரின் இறுதி சடங்குக்கு பிறகு இந்த ஈமகிரியை மண்டபத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த கட்டிடத்தை சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், இந்த கட்டிடத்திற்கு அருகில் புதர் மண்டி கிடப்பதால் பாம்புகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சுற்றி வளர்ந்துள்ள சீமை கருவேல முள் செடிகள் மற்றும் புதரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொள்ளிடம்.