அகரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. இதனால் அந்த கட்டிடம் சேதமடைந்து வீணாகி வருகிறது. எனவே காட்சிப்பொருளான கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.