திருவந்திபுரம்- கே.என்.பேட்டை பகுதிகளில் அதிகளவு பன்றிகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.