குரங்குகள் தொல்லை

Update: 2022-08-28 11:43 GMT

திருவட்டார் தாலுகா, பொன்மனையை சுற்றி உள்ள பகுதியில் விளைநிலங்களில் பலா, வாழை, தென்னை போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் குரங்குகள் விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் மின்கம்பங்களில் ஏறி அங்கும், இங்கும் தாவுகின்றன. இதனால் மின்சாரம் தாக்கி குரங்குகள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்