நாய்கள் தொல்லை

Update: 2022-08-26 14:49 GMT


மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பொறையாறு.

மேலும் செய்திகள்