சமுதாயக்கூடம் பராமரிக்கப்படுமா?

Update: 2022-08-25 14:20 GMT


தஞ்சாவூர் மாவட்டம் உள்ள ஆலக்குடி ஊராட்சியில் அம்பேத்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடம் பாரமரிப்பு இன்றி கிடக்கிறது. மேலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவு நேரத்தில் மது அருந்தும் கூடமாக செயல்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சமுதாய கூடத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் ஆலக்குடி

மேலும் செய்திகள்