திருவாரூர் நகர், சேந்தமங்கலம், விளமல், புலிவலம் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றிதிரிகின்றன. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருவாரூர்