தாளவாடி பஸ் நிலையம் அருகே 10-க்கு மேற்பட்ட நாய்கள் சுற்றி திாிகின்றன. இவை ரோட்டில் செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. சில நேரம் ரோட்டின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனா். எனவே நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.