பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் ரோட்டில் உள்ள எல்லமேடு அருகே வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடைக்கு வெள்ளை நிற வா்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தொியாமல் வாகன ஒட்டிகள் அதில் ஏறி இறங்கும்போது கீழே விழுந்து காயம் அடைகிறாா்கள். மேலும் அந்த பகுதியில் மின்விளக்கும் எாிவதில்லை. உடனே வேகத்தடைக்கு வெள்ளை நிற வா்ணம் பூச அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.