செஞ்சி தாலுகா வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட வீராணாமூர் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை அதை சரிசெய்யவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் கிராம மக்கள் அச்சத்துடனே வந்து செல்கிறார்கள். இதை தவிர்க்க சேதமடைந்த மேற்கூரையை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.